இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 1,018 பேரும், தமிழகத்தில் 690 பேரும், டில்லியில் 576, தெலுங்கானாவில் 364 பேரும், கேரளாவில் 336 பேரும், ராஜஸ்தானில் 328 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 149 ஆகவும், குணமானவர்களின் எண்ணிக்கை 402 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 773 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
Image