வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம்

புதுடில்லி : வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தீவிரமாக கவனித்து வருகிறாம். சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜிடிபி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி ஊழியர் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.9 லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டியும், இ.எம்.ஐ., செலுத்தும் மாதங்களும் குறையும் வாய்ப்பு உள்ளது. தொழில்துறையினரின் கடனுக்கான வட்டியும் குறையக்கூடும். வங்கிக்கடனை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.


வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், மாத தவணை வசூல் செய்வதை 3 மாதங்கள் வங்கிகள் ஒத்திவைக்கலாம். இந்த 3 மாதம் அவகாச காலத்தை கடன் பெற்றவர்களின் 'சிபில் ஸ்கோரில்' சேர்க்க கூடாது. தனியார் நிறுவனங்களுக்கான வங்கி கடனுக்கான மாத தவணை 3 மாதம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


 

 


 


Popular posts
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 பேராகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது
இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!